தமிழ்நாடு

tamil nadu

ஆடுகளைக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்!

By

Published : Dec 30, 2019, 1:07 PM IST

ஈரோடு: தாளவாடி அருகே சிறுத்தை ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை அடித்துக்கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

erode-leopard-killed-goats-made-farmers-in-distress
ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (70). இவர் ஆடு, மாடுகளைப் பராமரித்து வளர்த்து வருகிறார்.

ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்!

மரியாபுரம் வனப்பகுதியில் சாமிநாதன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டுப்பட்டிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகளைக் காணவில்லை.

இதையடுத்து, ஆடுகளைத் தேடிய சாமிநாதன், இரு ஆடுகள் கடித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் உடல் பாகங்கள் தின்று பாதி உடலோடு காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தது.

சிறுத்தையின் கால் தடம்

இதுகுறித்து சாமிநாதன் உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்துக்கொன்றதால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆடு

இதையும் படிங்க:சிறுத்தையின் பிடியில் நாய்: பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details