தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயின் கோயில் கதவை உடைத்து நகை திருட்டு - கைவரிசை காட்டியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு..! - ஜெயின் கோயில்

ஈரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்குச் சொந்தமான கோயிலின் பூட்டை உடைத்து, இரும்பு உண்டியலை இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியாகி உள்ளது.

ஈரோடு
ஈரோடு

By

Published : Nov 13, 2022, 11:55 AM IST

ஈரோடு: திருநகர் காலனி அடுத்த இந்திரா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயின் சமூகத்தினருக்குச் சொந்தமான கோயில் உள்ளது. சுப்தேவ் என்பவர் இந்த கோயிலின் பூஜைகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் அதிகாலை பூஜைகளை மேற்கொள்ள சுப்தேவ் வந்த போது கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

கோவிலினுள் சென்று பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சியாக அங்கிருந்த பீரோல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறடிக்கப்பட்டும், மகாவீர் கடவுள் கழுத்திலிருந்த 8 சவரன் தங்க நகை திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் கோயில் இரும்பு உண்டியலும் திருடிச் செல்லப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்தனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் இரும்பு உண்டியலைத் தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. சிசிடிவியில் தெரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேநேரம் கோயிலில் இரும்பு உண்டியலைத் திருடிய நபர்கள் அதை உடைக்க முடியாமல் சாலையோரம் வீசிச் சென்றிருந்தனர். இதனால் லட்ச ரூபாய் பணம் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜெயின் கோயில் கதவை உடைத்து நகை திருட்டு

இதையும் படிங்க :அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்க தேவை இல்லை - மேயர் பிரியா

ABOUT THE AUTHOR

...view details