ஈரோடு நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருமான வரித்துறை உதவி ஆணையர் பாரதி தலைமையில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் தங்கும் விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் விடுதியில் வருமானவரித்துறையினர் சோதனை - it ride
ஈரோடு: தனியார் விடுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித்துறையினர் ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர்.
வருமானவரித்துறையினர் சோதனை
அப்போது, விடுதியின் ஒவ்வொரு அறையிலும் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.