தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - வீணாகும் குடிநீர்! - erode water pipe broke

ஈரோடு: பவானி ஊராட்சிக்கோட்டையிலிருந்து கொண்டு வரப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணியின் சோதனை ஓட்டத்தின்போது, ஐந்தாவது இடமாக மீண்டும் சென்னிமலை பகுதியில் தண்ணீரின் வேக அழுத்தம் தாங்காமல் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் விரயமானது.

water wasted
water wasted

By

Published : Aug 14, 2020, 2:19 AM IST

ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கிடும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை காவிரிப் பகுதியிலிருந்து ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது திட்டப் பணிகளில் தீவிரம் செலுத்தப்பட்டு, திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஊராட்சிக்கோட்டையிலிருந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, தண்ணீரின் வேகம், தண்ணீரின் அழுத்தம் ஆகியவற்றை குழாய்கள் தாங்குகிறதா என்பது குறித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - வீணாகும் குடிநீர்!
இந்த நிலையில், ஊராட்சிக்கோட்டையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஈரோடு மணல்மேடு அருகேயுள்ள சென்னிமலைச் சாலையில், திட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் நேற்று மாலை (ஆக.13) திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.
சாலையில் தேங்கியுள்ள நீர்
இதன் காரணமாக குழாயிலிருந்து பல லட்சம் லிட்டர் நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடி வீணானது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த துறை அலுவலர்கள் உடனடியாக குழாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு தண்ணீர் விரயம் தடுக்கப்பட்டதுடன் உடைப்பு ஏற்பட்ட குழாயும் சீரமைக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல் பவானி பிரதான சாலைப் பகுதியிலுள்ள ராட்சத குழாயிலும், இரண்டாவது முறையாக ரயில்வே நிலையம் பகுதியில் பொருத்தப்பட்ட குழாயிலும், மூன்றாவது முறையாக சென்னிமலை சாலைப் பகுதியிலும், நான்காவது முறையாக காந்திஜி சாலைப் பகுதியிலும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் விரயமானது. ராட்சத குழாய்களில் தண்ணீரின் வேக அழுத்தம் தாங்காமல் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருவது பொதுநல ஆர்வலர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details