தமிழ்நாடு

tamil nadu

வெளிநாடுகளுக்கு சுடச் சுட பறக்கும் ஈரோடு இட்லி...!

ஈரோடு இட்லி சந்தையில், தட்டு இட்லி, ஜிலேபி இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, இதய வடிவிலான இட்லி, வட்டம் வடிவிலான இட்லி பல வகையான இட்லி, உலகம் அளவில் பிரபலமாகியுள்ளது.

By

Published : Sep 30, 2021, 2:02 PM IST

Published : Sep 30, 2021, 2:02 PM IST

idly
idly

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலையில் கருங்கல்பாளையம், திருநகர் காலனி அருகே சாலையின் ஒரு பகுதியில் காலை நேரங்களில் சுடச்சுட இட்லிகளை பொது மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

இந்த இட்லி சந்தையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ள இட்லிகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆரம்ப காலத்தில், வியாபாரிகள் இட்லி சுட்டு அதனை வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். காலப்போக்கில் வீட்டின் முன்பு கடை அமைத்து அங்கேயே இட்லி வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

வியாபாரம் சூடு பிடித்ததைடுத்து படிப்படியாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இட்லி கடைக்கு சென்று காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லிகளை வாங்கிச் சென்று வந்தனர்.

இட்லி விற்பனைகள் பிரபலமானதையடுத்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டினர் இந்த இட்லியை சுவைத்துள்ளனர். அப்படி சுவைத்தபோது இட்லி பிடித்து போகவே அவர்கள் வியாபாரிகளிடம் தொடர்பு எண்களை பெற்றனர்.

ஈரோடு இட்லி சந்தை

அதன் பின் வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு சென்றபின் அங்கிருந்து இட்லி வியாபாரிகளை தொடர்பு கொண்டு இட்லியை ஏற்றுமதி செய்ய சொல்லி வியாபாரத்தை உலக அளவில் விரிவாக்கியுள்ளனர்.

உள்ளூர்களிலும் திருமண நிகழ்ச்சிகள், இதர நிகழ்ச்சிகள் என அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் இந்த இட்லி சந்தையிலிருந்து முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து மக்கள் வாங்கி செல்கின்றனர்.

படிப்படியாக இட்லி சந்தை பிரபலமானது அடுத்து இட்லியின் வடிவத்தை மாற்ற முயற்சி செய்த வியாபாரிகள், தட்டு இட்லி, ஜிலேபி இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, இதய வடிவிலான இட்லி, வட்டம் வடிவிலான இட்லி போன்ற பல்வேறு வகையான இட்லிகளை சுட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

அதிகாலை மூன்று மணிக்கு தொடங்கி காலை 11 மணி வரையிலும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் இட்லி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இட்லி வியாபாரம் சிறு தொழிலாக ஆரம்பித்து தற்போது படிப்படியாக மூன்று தலைமுறைகளை கொண்டு இந்த இட்லி சந்தை செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் ’இட்லி அம்மா’வுக்கு சொந்த வீடு: சொன்னதை செய்து காட்டிய ஆனந்த் மஹிந்திரா!

ABOUT THE AUTHOR

...view details