தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை! - erode farmers asks compensation for banana tree

ஈரோடு: கன மழையில் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுடன், வயல்களிலும் நீர் புகுந்ததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமடைந்தன.

banana trees

By

Published : Nov 8, 2019, 8:59 PM IST

ஈரோட்டில் வெண்டிபாளையம் நுழைவு பாலத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்றிரவு பெய்த கனமழையால் நுழைவு பாலத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியைக் கடக்க வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் அங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம்

மேலும் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் மழையால் வாய்க்கால் நிறைந்து, மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வயல்களுக்குள் மழை நீர் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமாகின.

வாய்க்கால் நீர், வீட்டிற்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவரை அரசு கட்டிக் கொடுத்து, தங்களின் வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் வயல்களுக்குள் புகுந்த மழை நீரால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

பாதிப்படைந்த விவசாயி பேட்டி

மேலும் படிக்க:நீலகிரியில் தொடர் மழை - அழுகிய நிலையில் பூக்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details