ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வீரப்பன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியிலுள்ள மளிகைக் கடையிலிருந்து வந்த மாருதி வேனைத் தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பல்வேறு வடிவிலான பாக்கெட்டுகளில் அந்த காரில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மளிகைக் கடையில் மறைத்து வைத்து நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விநியோகிப்படுவது தெரியவந்தது.