தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கர்நாடகத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த கிரானைட் கற்களை வட்டாட்சியர், கனிம வளத்துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

கிரானைட் கற்களை ஏற்றி வந்த 3 லாரிகள்
கிரானைட் கற்களை ஏற்றி வந்த 3 லாரிகள்

By

Published : Jul 10, 2020, 12:42 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோம்பு பள்ளம் என்ற இடத்திற்கு உரிய அனுமதியின்றி கிரானைட் கற்களை லாரியில் ஏற்றி வருவதாக வட்டாட்சியர், கனிம வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேசன், கனிம வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகத்தில் இருந்து வந்த மூன்று லாரிகளை அவர்கள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் உரிய அனுமதியின்றி கிரானைட் கற்களை ஏற்றியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டுநர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு முன்பிணை கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details