தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை - பேரன் கைது - Erode murder Grandmother's head put on TV

ஈரோடு: மதுபோதையில் பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை செய்த பேரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை
பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை

By

Published : Jan 9, 2020, 11:41 AM IST


ஈரோடு விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவர், நேற்று இரவு மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, வீட்டில் இருந்த டிவியை எடுத்து அருகில் இருந்த தனது பாட்டி ஜோகராம்பாள் தலையில் போட்டு பீர் முகமது உடைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ஜோகராம்பாள் உயிரிழந்தார்.

பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை

இதுகுறித்து, அங்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த சூரம்பட்டி காவல் துறையினர், மூதாட்டியின் உடலை உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பீர் முகமதுவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பேக்கரி உரிமையாளரை தாக்கி கடையை அடித்து துவம்சம் செய்த கடற்படை வீரர் கைது

ABOUT THE AUTHOR

...view details