தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனை அலட்சியம்: நோயாளிகள் சாலையில் படுத்துறங்கும் அவலம்! - Erode News

ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், இடப்பற்றாக்குறை காரணமாக உள் நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே படுத்திருக்கும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை அலட்சியம்: நோயாளிகள் சாலையில் படுத்துறங்கும் அவலம்!
அரசு மருத்துவமனை அலட்சியம்: நோயாளிகள் சாலையில் படுத்துறங்கும் அவலம்!

By

Published : Jul 12, 2020, 2:14 AM IST

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட அளவில் முக்கியமான மருத்துவமனையாகவும், அனைத்துத் தரப்பு நோய்களுக்கும் சிகிச்சையளித்திடும் வகையில் நவீன வசதிகளைக் கொண்ட அனைத்துப் பிரிவு மருத்துவமனையாகவும் செயல்பட்டுவருகிறது.

இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தனியிடம் ஒதுக்கி சிறப்பு வார்டும் இயங்கிவருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகம் வருவதாகக் காரணம் கூறி கால்களில் காயமடைந்து பூரணமாக குணமாகாத இரண்டு நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடமொதுக்காததால் இரண்டு நோயாளிகளும், மருத்துவமனைக்கு வெளியே வீதியில் மேம்பாலத்தின் கீழ் யாசகர்களோடு யாசகர்களாக படுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனை அலட்சியம்: நோயாளிகள் சாலையில் படுத்துறங்கும் அவலம்!

இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த நோயாளி ஹக்கீம் ரகுமான் கூறுகையில், ஈரோட்டிலுள்ள உணவகமொன்றில் புரோட்டா மாஸ்டராகப் பணியாற்றும் போது, வாகனத்திலிருந்து கீழே விழுந்ததால், சக ஊழியர்களால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தேன்.

இந்நிலையில் கால் காயம் குணமடைந்து விட்டதால், மாத்திரைகள் உட்கொண்டால் போதுமானது என்றுக் கூறி டிஸ்சார்ஜ் செய்தனர். இருந்தும் நடக்க முடியாததால், வீட்டிற்கு செல்ல முடியாமல் இங்கே 15 நாள்களாக இருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் கொலை வழக்கு: விசாரனையை தொடங்கியது சிபிஐ!

ABOUT THE AUTHOR

...view details