கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் காந்தி அறக்கட்டளை, காந்தி மன்றம், சர்வோதய சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அதனடிப்படையில் இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான நேற்று கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நம்பியூர் சர்வோதய சங்க உறுப்பினர்கள் காந்தியடிகளின் சர்வ சமய பாடல்களை பாடினர். அதில் சத்தியம், அஹிம்சை, திருடாமை என்னும் கொள்கையை பறைசாற்றியும் பாடல்கள் பாடப்பட்டன.