ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வாழை, மல்லி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வந்தார், கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்தை சுற்றியுள்ள காகித ஆலை கழிவுகளால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதால் மாற்று தொழிலாக விவசாயம் சார்ந்த பண்ணையில் மீன் வளர்ப்பு தொழிலை மேற்கொண்டார்.
இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ணையில் குட்டை அமைத்து அதில் 4 ஆயிரம் கட்லா, ரோகு போன்ற மீன்குஞ்சுகளை வளர்த்துவந்தார், இந்நிலையில் இன்று காலை மீன் பண்ணைக்கு சென்றப்போது மீன் பண்ணையில் மீன்கள் இறந்து மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.