கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், ஈரோடு மாவட்டம் பெரியார் நகர் மற்றும் சம்பத் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன.
'உழவர் சந்தைகள் நாளை முதல் பழைய இடத்திலேயே இயங்கும்' - ஈரோடு மாநகராட்சி - erode farmers markets run as usual place
ஈரோடு: இடமாற்றம் செய்யப்பட்டுள்ள உழவர் சந்தைகள் நாளை முதல் மீண்டும் பழைய இடத்திலேயே இயங்கும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதையடுத்து, தற்போது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஈரோடு மாவட்ட நிர்வாகம், நாளை முதல் அரசுப் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள் வழக்கமான பெரியார் நகர் மற்றும் சம்பத் நகர் பகுதியிலேயே செயல்படும் என்று அறிவித்துள்ளது.
எனவே சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நாளை முதல் தங்களது காய்கறிகளை அந்தந்த உழவர் சந்தைகளுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்ய முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:50 நாள்களுக்குப் பிறகு மீண்டும் திறந்த உழவர் சந்தை!