ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ' இந்த ஆண்டு பவானிசாகர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரை 7 இடங்களில் தடுப்பணை கட்டி, உபரி நீரை தேக்கி வைத்து, குளம் - குட்டைகளில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பவானிசாகர் அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளைவாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள 1 இலட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு, நெல் பயிரிட நன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் டிசம்பர் மாத இறுதி வரை திறக்கப்பட வேண்டும்.