ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை தடுத்து நிறுத்த சென்ற 12 விவசாயிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விவசாயிகள் நூதன போராட்டம் ! - மொடக்குறிச்சி
ஈரோடு: விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர்.
வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விவசாயிகள் நூதன போராட்டம் !
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தாங்கள் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம். இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது' என்றனர்.