தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கி சுடும் பயிற்சி மைய மேம்பாட்டுப் பணியை தொடங்கிவைத்த எஸ்பி! - எழுமாத்தூர் துப்பாக்கி சுடும் மையம்

ஈரோடு: எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அடிப்படை கட்டுமான மேம்பாட்டுப் பணிகளை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.

inauguration
inauguration

By

Published : Sep 10, 2020, 3:34 PM IST

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியில் காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், பயிற்சி பெறுவதற்கான அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக மாவட்ட, மாநில காவல் துறைக்கு முறையீடு செய்யப்பட்டது.

மேலும், மாநில அளவில் காவல் துறையில் தேர்வு செய்யப்படும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி வழங்கிடும் வகையில், இந்த துப்பாக்கி சுடும் மையத்தை மேம்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து மாநில துப்பாக்கி பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை பாதுகாப்பான பகுதியாக மாற்றியமைத்திட மதில் சுவர்கள் அமைத்திடவும், பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக தரைத்தளம் அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

மேம்பாட்டு பணிக்கான பூஜை
மேலும் பயிற்சி பெறும் காவல் துறை பயிற்சியாளர்களுக்கு சிறப்பான வகையில் ஓய்வறைகள் கட்டிடவும், பயிற்சி பெறுவோர் தங்குவதற்கு உரிய அறைகளும் சிறப்பான முறையில் கட்டித்தரப்பட்டு, தரமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையமாக உருவாக்கிடவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்குரிய வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details