தமிழ்நாடு

tamil nadu

வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.2 லட்சம்; தேர்தல் பறக்கும்படை அதிரடி!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காமராஜ்நகரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில் இறைச்சிக் கோழி வாகனத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Mar 17, 2019, 4:23 PM IST

Published : Mar 17, 2019, 4:23 PM IST

EC

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுயில் உள்ள கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று பறக்கும் படையும், மூன்று கண்காணிப்புக் குழுவும் செயல்பட்டுவருகிறது. இதில் இன்று கோபிசெட்டிபாளையம் திருப்பூர் சாலையில் காமராஜ்நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி அன்பழகன் தலைமையில், உதவி ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருப்பூரை நோக்கிச் சென்ற இறைச்சிக் கோழி பாரம் ஏற்றிச்செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஓட்டுநர் மணிகண்டனிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 820 ரொக்கப்பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை குழுவினர், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்று கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.

Erode EC

மேலும், விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் செயல்பட்டுவரும் இறைச்சி மோழிப்பண்ணையிலிருந்து நேற்று முன்தினம் இறைச்சி கோழிகளையும் காடை குருவிகளையும் பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களுரூ-ஓசூர் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டுவரும் இறைச்சிக் கடைகளுக்கு இறக்குமதி செய்து, அதில் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாகவும், அதற்கு விற்பனை ரசீது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதனால் கைப்பற்றப்பட்ட பணத்தை கரூவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details