தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.இதையடுத்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வஉசி பூங்கா பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த வாகனத்ததை ஓட்டி வந்தவர் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பணியாளர் சிதம்பரம் என்பதும், அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் பணம் இருந்ததும் தெரியவந்தது.