தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்! - Thirumahan Everaa

ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது(46)

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 4, 2023, 1:49 PM IST

Updated : Jan 4, 2023, 2:09 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா(46), 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். மிகவும் துடிப்போடு செயல்பட்டு வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட திருமகன் ஈவெராவுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அவரை உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. திருமகன் ஈவெரா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

திருமகன் ஈவெரா மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் "ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் திரு. ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.

சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு.ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆவின்: முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் நீக்கம்

Last Updated : Jan 4, 2023, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details