ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கி நடந்துவருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். மொத்தமாக 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதில் ஈவிகேஎஸ். இளங்கோவன் 37 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தபால் வாக்குகளுக்கு பின் மொத்தம் 15 சுற்றுகளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.