வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை உடன் முடிந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆனந்த் உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 45 மாற்று பாலினத்தவர், ராணுவ வீரர்கள் வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையமும், 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகளாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் 238 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த இடைத் தேர்தலில் 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஐந்துக்கும் மேற்பட்ட துணை ராணுவம் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நாளை இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியானது இன்று காலை தொடங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியிலும் ஆன கிருஷ்ணன்ண்ணி மற்றும் கிழக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் சென்று தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி, கிழக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி