தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என்னை எளிதில் சந்திக்கலாம்' என அதிமுக ஈபிஎஸ் அணி வேட்பாளர் பேச்சு! - என அதிமுக ஈபிஎஸ் அணி வேட்பாளர் பேச்சு

AIADMK Erode Candidate KS Thennarasu:'எங்கள் வீட்டில் வாட்ச்மேனும் இல்லை, நாயும் இல்லை. ஆகவே, பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தம்மை சந்திக்கலாம்' என அதிமுகவின் எடப்பாடி தலைமையிலான அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 1, 2023, 7:00 PM IST

'என்னை எளிதில் சந்திக்கலாம்' என அதிமுக ஈபிஎஸ் அணி வேட்பாளர் பேச்சு

ஈரோடுகிழக்கு இடைத்தேர்தலில் (Erode East By Election 2023) அதிமுக வேட்பாளராக ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை(AIADMK Erode Candidate KS Thennarasu) அதிமுக இடைக்காலப் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் இடைத்தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் அக்கட்சியினரிடையே பேசிய அவர், 'திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றியைப் போல, ஈரோடு கிழக்கில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்' என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, 'இடைத்தேர்தலில் எங்கள் முன்னணிக்கு எதிரியை காணவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். பின், தேர்தல் பணிக்காக பல அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் நியமித்தார்? அதிமுகவின் பலம் அவருக்கு நன்றாகவே தெரியும்.

எடப்பாடி பழனிசாமி நல்ல திட்டங்களை அளித்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது 20 மாதங்களிலேயே திமுக ஆட்சியின் பல்வேறு தவறுகளால் மக்கள் அதை வெறுக்க ஆரம்பித்தனர். எனவே, இடைத்தேர்தலில் அதிமுக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வேலுமணி, ’திமுக ஆட்சியில் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சொத்து வரி, மின் வரி போன்றவை கடுமையாக உயர்த்தப்பட்டன. எனவே, மக்கள் தங்கள் நலனுக்காக மட்டுமே அதிமுகவை தேர்வு செய்வார்கள்' எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தங்கமணி இடைத்தேர்தல் பண பலத்திற்கும் மக்கள் பலத்திற்கும் இடையிலான போராட்டம் என்றும்; கடந்த 2 ஆண்டுகளில் திமுகவுக்கு கெட்ட பெயர்தான் கிடைத்தது என்றும்; காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் வசித்து வருகிறார். அதனால் அவரை மக்கள் சந்திக்க முடியாது என்றும் ஆனால், ஈரோட்டில் வசிக்கும் தென்னரசை எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்றார்.

அப்போது பேசிய தேர்தல் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, 'எங்கள் வீட்டில் வாட்ச் மேனும் இல்லை, நாயும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். அத்துடன் ஈரோட்டில் திமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை. அதிமுகவின் ஆட்சியில் தான் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வசதிகளும் கொண்டுவரப்பட்டது’ எனவும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய பொன்னையன், அதிமுக மக்கள் நலனை மட்டுமே பார்ப்பதாகவும்; ஆனால், திமுக ஊழல் நடவடிக்கைகளை மட்டுமே குறி வைப்பதாகவும் தெரிவித்தார். எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் அடிச்சுவடுகளில் அதிமுகவை தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி திறமையான நிர்வாகி என்றார். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளதாகவும் பொன்னையன் கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்மகன் உசேன், 'தென்னரசு 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மக்கள் நலனுக்காக கடந்த 4 ஆண்டுகளாக நல்ல ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் ஜெயலலிதா மறைவுக்கு பின், இ.பி.எஸ்., ஆட்சி நீடிக்க முடியாது எனப் பலர் கூறினர். ஆனால், திறம்பட ஆட்சி செய்தார்' எனவும் தெரிவித்தார்.

மேலும், 'எதிர் வேட்பாளரை போல் சென்னைக்கோ, டெல்லிக்கோ செல்ல முடியாத தென்னரசுவை ஈரோட்டில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். தற்போதைய திமுகவின் தவறான ஆட்சியால் மக்களுக்கு இன்னல்கள் அதிகமாகிவிட்டன' என்றார்.

பின்னர் பேசிய நத்தம் விஸ்வநாதன், 'இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக ஆட்சியில் இருந்தபோதும், பல இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த வெற்றி தமிழ்நாடு மற்றும் அதிமுக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்’ என்றார்.

மேலும் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், 'கடந்த 20 மாதங்களாக பல்வேறு வகையில் திமுக தோல்வியடைந்ததால், தற்போது திமுக ஆட்சி வெளியேறுமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். சமீப நாட்களாக ஈரோட்டில் மக்களைச் சந்தித்தபோது, ​​மின் கட்டண உயர்வால் விசைத்தறிகள் செயல்படாததைக் காரணம் காட்டி அதிமுகவுக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளனர். தற்போதைய ஆட்சியில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கியதன் மூலம் மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும், முதலமைச்சரின் உறுதிமொழியின்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.22,000 மானியம் மற்றும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Erode East By Election: அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details