ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையத்தைச் சேர்ந்தவர் குமார்(31). இவர், வாடகை கார் ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவியும், திவாஸ் (6) என்ற மகனும் உள்ளனர்.
வீட்டிலிருந்து செல்போனில் பேசியபடியே குமார் வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு குமார் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் ரத்த கறையுடன் சாக்கு மூட்டை கிடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.