ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் வள்ளியம்மை வீதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் வழக்கம்போல், தமிழ்நாடு அரசின் விலையில்லா அரிசி மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி பல்வேறு வண்ணங்களில், சமைக்கத் தகுதியற்று இருப்பதாகக் கூறி, கடையை 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் முற்றுகையிட்டனர்.
ரேசன் கடையில் கோதுமை, பாமாயில் சரியாக வழங்குவதில்லை; இங்கு வழங்கப்படும் ரேசன் அரிசியும் தரமற்றதாக சமைக்கத் தகுதியற்றதாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், தரமான அரிசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை வழங்க வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள் அரிசியை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர்.