தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்வாய் உள்ளே இறங்கி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்! - சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அருகே உள்ள கருங்கரடு பகுதியில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி கால்வாயில் உள்ளே இறங்கி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

kanjikovil
காஞ்சிகோயில்

By

Published : Jun 26, 2023, 3:21 PM IST

Updated : Jun 26, 2023, 4:39 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின் மூலமாக கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காளிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகின்றன.

விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து, எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து இவ்வழக்கில் பணிகளை துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு முத்துசாமியிடம் இன்று (ஜூன் 26ஆம் தேதி) பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும், மண் கரை, மண் கரையாகவே இருக்க வேண்டும், அரசாணை 276யை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், பணிகள் துவங்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக காலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மூலமாக அரசாணையை ரத்து செய்வது போன்ற கோரிக்கையை பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உறுதி அளித்தை அடுத்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பு பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின் உறுதிமொழியை மீறி இரவு நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளனர். இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: சகோதரர்கள் இருவர் பலி

Last Updated : Jun 26, 2023, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details