தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசியக்கொடி ஏற்றியபின் தியாகிகளின் குடும்பங்களுக்கு விசிட் அடித்த கலெக்டர்

வ.உ. சிதம்பரனார் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்

By

Published : Aug 15, 2021, 6:20 PM IST

ஈரோடு:வ.உ. சிதம்பரனார் மைதானத்தில் இன்று காலை 75ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். விழாவைத் தொடர்ந்து, ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, ஈரோடு குடியிருப்பில் வசிக்கும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசு வீட்டுக்கு சென்று, அவரை சிறப்பு செய்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவலரிடம் தேசியக் கொடி பெற்ற மிஷ்கின்

ABOUT THE AUTHOR

...view details