சத்தியமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் விஜயகுமார், முத்துக்குமார் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூர் மாவட்டத்தில் கண்ணாடி பாரம் ஏற்றிவிட்டு வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களைப் போன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். பொது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களான விஜயகுமார், முத்துக்குமார் ஆகிய இருவரும் சத்தியமங்கலம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், இவர்கள் தமிழ்நாடு திரும்ப கோலாம்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். கடந்த 8ஆம் தேதி மூன்று வாகனங்களில் புறப்பட்ட 50 பேர் நேற்று (மே.10) மாலை ஈரோடு வந்து சேர்ந்தனர்.