தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி! - palamalai

ஈரோடு: பவானி அருகே அம்மாபேட்டையில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை தெருநாய்கள் கடித்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது.

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

By

Published : Apr 22, 2019, 8:48 AM IST

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த பாலமலை பகுதியில் அதிக அளவில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாயத் தோட்டங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து ஒன்றரை வயதான ஆண் புள்ளிமான் ஒன்று ஊமாரெட்டியூர் வடக்குக்காடு பகுதிக்கு நேற்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இதைக் கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை துரத்திக் கடித்துள்ளன. இதில், படுகாயமடைந்த மான் உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சென்னம்பட்டி வனத்துறையினர் மானின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details