ஈரோடு:சோலாரில் இருந்து வெண்டிப்பாளையம் செல்லும் வழியில் தனியார் பால் குளிர்பதனிடும் நிறுவனம் உள்ளது. பாலு என்பவருக்குச் சொந்தமாக நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு பால்கோவா, பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்காக சமீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பாய்லர் கருவிகளை பாலு ஆலையில் நிறுவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் பணியில் இருந்த தொழிலாளர்களில், ஒருவர் பாய்லரை இயக்கி உள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாய்லரை இயக்கிய கருமாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.