ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சரவணகுமார் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது ஆதரவாளர்களுடன் சரவணகுமார் மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். முன்னதாக ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வேட்பாளர் சரவணகுமார் நுழைய முற்பட்டபோது காவல்துறையினரும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் அவரை தடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் விதிமுறையை மீறியதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மீது வழக்குபதிவு! - Erode constituency
ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவண குமார் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![தேர்தல் விதிமுறையை மீறியதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மீது வழக்குபதிவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2811036-2-c3921c5b-76fc-4fea-af3f-2231b1e831a9.jpg)
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவண குமார் உட்பட 5 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சரவணகுமார் தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கதிரவனிடம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் சூரம்பட்டி காவல் துறையினர் மநீம வேட்பாளர் சரவணகுமார் மற்றும் மநீம கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜேஷ், துரை சேவுகன், ராஜா முகமது, சுரேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.