ஈரோடு: ஈரோடை அடுத்து மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த யாசிப் முஷபீனை கடந்த மாதம் பிடித்தனர். அப்போது அலுவலர்கள் அதிரடியாக அவர் தங்கியிருந்த பகுதியில் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தி வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு ஸ்மார்ட்போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி யாசிப் முஷபீனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் ஈரோடு நீதிமன்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி யாசிப் முஷபீனை 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிகோரி இருந்தனர். இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி யாசிப் முஷபீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.