கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் சில துறைகள் இயங்க தமிழ்நாடு அனுமதி கொடுத்தது. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலைகள் இயக்க விருப்பம் தெரிவித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள தொழிற்சாலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்துள்ள தொழிற்சாலைகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்ட வட்டாட்சியர் குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகள் இயக்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த 40க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, அங்குத் தங்கி பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்களிடம் கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகுப் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அதுவரை அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் தங்களது ஊருக்கு செல்ல விருப்பமுள்ள வடமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பி வைத்திடவும், தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்டு அவர்களை அனுப்பி வைக்க அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கட்டடத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்