தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி, ஆட்சியர் கதிரவன் ஆய்வு - erode collector inspect corona vaccine works

ஈரோடு: முன்களப்பணியாளர்கள் 13, 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

erode collector inspect corona vaccine works
erode collector inspect corona vaccine works

By

Published : Jan 14, 2021, 10:15 PM IST

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி ஜன 16ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது. சென்னையிலிருந்து தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு ஈரோடு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என ஏழு இடங்களில் உள்ள மையங்களில் போடப்படுகிறது.

இந்தத் தடுப்பூசிகள் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 13, 800 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் இன்று (ஜன. 16) கள ஆய்வு மேற்கொண்டார்

இதையும் படிங்க...கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள பிரதமர் மோடி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details