தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் தாமதம்: களத்தில் இறங்கிய கலெக்டர்! - Erode District Local election vote counting

ஈரோடு: சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் கதிரவன் வாக்கு எண்ணும் ஊழியர்களுடன் அமர்ந்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டார்.

collector
collector

By

Published : Jan 3, 2020, 7:20 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக ஏழு ஊராட்சி ஒன்றியங்கள், இரண்டாம் கட்டமாக ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று ஒரே கட்டமாக 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மேசைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்டவர்களின் வாக்குகளை, காலை முதல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர்

காலையில் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கதிரவன் காலை முதல் பவானி, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி டி.என். பாளையம், பெருந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குகள் எண்ணும் பணியை நேரில்சென்று ஆய்வு செய்தார்.

மாலையில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வுசெய்த அவர், அங்கு வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமாக எண்ணப்பட்டு வருவதைப் பார்த்தார். இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுடன் அவரும் ஒன்றாக இணைந்து, வாக்குகளைப் பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அலுவலர்களிடம் ”விரைவாக வாக்குகளை எண்ணி வெற்றி தோல்விகளை வெளியிடவேண்டும்” என சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு பின் அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: 21 வயதில் ஊராட்சி மன்ற தலைரான பெண்..!

ABOUT THE AUTHOR

...view details