ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன், வருவாய் அலுவலர் கவிதா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், கரோனா தொற்று பரவாமலிருக்க அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஈரோடு மாவட்டம் வந்த 64 பேரில், 41 பேருக்கு கரோனா பாதிப்பில்லை. மீதமுள்ளவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா இம்மாதம் நடைபெறுவது வழக்கம், அதில் நான்கு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.