ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆகும். இந்த அணையின் நீர் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1589 கனஅடியாக உயர்வு
ஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 589 கனஅடியாக உயர்ந்துள்ளது.
Erode Bhawanisagar Dam
இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விநாடிக்கு ஆயிரத்து 589 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் 81.4 அடியாகவும், நீர்வரத்து 1589 கனஅடியாகவும், நீர் இருப்பு 16.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம், குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.