தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சி - erode bhavanisagar woman dies falling from bus cctv video viral

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் இருந்து பண்ணாரிக்குப் புறப்பட்ட பேருந்தில் பயணித்த பெண், வளைவில் திரும்பும்போது பேருந்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

cctv video of bhavanisagar woman falling from bus
cctv video of bhavanisagar woman falling from bus

By

Published : Mar 10, 2020, 3:53 PM IST

பவானிசாகர் முன்னாள் ராணுவவீரர் குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி முத்தம்மாள்(61). இவர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி பவானிசாகரில் இருந்து பண்ணாரிக்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்து பண்ணாரி நோக்கி சென்றுகொண்டிருந்தது.

டவுன்சிப் என்ற வளைவில் பேருந்து திரும்பும்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தில் நின்று கொண்டிருந்த முத்தம்மாள் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார்.

இறந்த முத்தம்மாள்

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி 27ஆம் தேதி முத்தம்மாள் உயிரிழந்தார். தனியார் பேருந்தில் சிசிடிவி கேமரா வைத்திருந்ததால் பேருந்தில் இருந்து முத்தம்மாள் தவறி விழும் வீடியோ பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க... கிணற்றில் தவறி விழுந்த பூனை: போராடி மீட்ட தீயணைப்புத் துறை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details