ஈரோடு: சொத்து வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் செயல்படும் வரி செலுத்துவோர் நலச்சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
வீட்டு வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து பிச்சை எடுத்து போராட்டம்! - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
ஈரோட்டில் வீட்டு வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
Erode
அப்போது, வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும், குப்பை வரியை முழுமையாக நீக்க வேண்டும், பாதாள சாக்கடை வைப்புத் தொகையினை பாதியாக குறைக்க வேண்டும்; அதன் மாதாந்திர சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர், கைகளில் தட்டு ஏந்தியபடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தொடர் சர்ச்சையில் சிக்கும் TTF வாசன்.! காரின் நம்பர் பிளேட் இல்லாமல் வந்து அபராதம்!