தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு மிஸ்ஸாகும் ஃபுட்! - Sathyamangalam no bamboos

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் விருப்ப தீவனமாக விளங்கும் மூங்கில் புல்லை மீண்டும் புதிதாக நடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

erode-at-sathyamangalam-sanctuary-elephants-has-insufficient-bamboos-to-eat
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காய்ந்து கிடக்கும் மூங்கில்

By

Published : Feb 18, 2020, 7:45 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய புலிகள் காப்பகமாக விளங்குகிறது.

சத்தியமங்கலம், ஆசனூர் என இரண்டு வனக்கோட்டங்கள், பத்து வனச்சரகங்களை உள்ளடக்கிய இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புல் வகையைச் சேர்ந்த மூங்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் நடவு செய்யப்பட்டது. இதன் காரணமாக பரந்து விரிந்த மூங்கில் காடுகளில் மூங்கில் மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டதால் தற்போது புதியதாக மூங்கில், நடவு செய்யப்படுவதில்லை.

புதியதாக மூங்கில் புல் நடவு செய்யப்படாததால் யானைகளுக்கு தேவையான மூங்கில் புல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்ததால், அதனை யானைகள் பறித்து சாப்பிட இயலாமல் தவிக்கின்றன. மீண்டும் புதியதாக மூங்கில் புல்களை நடவு செய்து வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காய்ந்து கிடக்கும் மூங்கில்

இதையும் பாருங்க:'காடன்' புரட்சித் தீயாகப் பரவும் - இயக்குநர் பிரபு சாலமன்

ABOUT THE AUTHOR

...view details