தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்திட்ட தம்பதி!

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த திருமணத்தின்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மணமேடையில் புதுமண தம்பதி கையெழுத்திட்டனர்.

erode at marriage bride groom signed a petition against caa
திருமணத்தில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்திட்ட தம்பதி!

By

Published : Feb 10, 2020, 12:08 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி திருமண மேடையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த சபீர் அன்சில் என்பவருக்கும், சாஜிதா பர்வீன் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்ததும் மணமேடையில் மணமகன், மணமகள் இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இதேபோல் திருமணத்திற்கு வந்த பெரும்பாலான பெண்களும் கையெழுத்திட்டனர்.

திருமணத்தில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்திட்ட தம்பதி!

இதையும் படிங்க: தேனி, நடிகர் ரஜினிகாந்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details