ஈரோடு:நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் நீண்ட நாள்களுக்குப் பிறகு நாளை (பிப். 24) திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கென நாளை அதிகாலை திரையரங்குகளில் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோவாக முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வலிமை திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கின்றன. அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு பேனர்கள் வைத்துள்ளனர்.