தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைச் சம்பவங்களை குறைக்க ஈரோடு மாவட்டத்தில் புதிய நடவடிக்கை

ஈரோடு: தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்கொலை ஆலோசனை மையத்தின் செயல்பாட்டை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் தற்கொலை ஆலோசனை மையம் தொடக்கம்
ஈரோட்டில் தற்கொலை ஆலோசனை மையம் தொடக்கம்

By

Published : Oct 6, 2020, 2:41 PM IST

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு, தன்னார்வ அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களிடையே தற்கொலை குறித்த எண்ணத்தைத் தடுத்து, தற்கொலை சம்பவங்களை வெகுவாகக் குறைத்திடும் வகையில் அம்மாவட்ட காவல்துறை, சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் மாவட்ட தற்கொலை ஆலோசனை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்தார்.

பின்பு பேசிய அவர், 'கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால், அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கை எண்ணத்தை அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவது முக்கியமானது. இதனால் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆலோசனை மையம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கானக் வகுப்புக்களை நடத்தி, தங்களது பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும்.

மேலும் கரோனா காலத்தில் பணி கிடைக்காத விரக்தி அதிகரித்துள்ளதால் விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான வகுப்புக்களை நடத்திட வேண்டும். தொழில்கள் அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கும் சென்று இந்த மையத்தினர் தங்களது வகுப்புக்களை நடத்துவதில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்

ABOUT THE AUTHOR

...view details