தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழி பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து 100 கோழிகள் உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கோழி லாரி கவிழ்ந்ததில் 100 கோழிகள் உயிரிழந்தன.

erode accident News
erode accident News

By

Published : Jul 4, 2020, 12:22 PM IST

நாமக்கல்லில் இருந்து சாம்ராஜ்நகருக்கு லாரி ஒன்று பிராய்லர் கோழிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது.

அந்த லாரி ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

இந்த விபத்து குறித்து அறிந்ததும், அங்கு வந்த காவல்துறையினர், மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து உயிருடன் இருந்த கோழிகள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஆசனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details