ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லவராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 200 -க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரையில் தமிழகத்தில் ஈரோடு,திருப்பூர், கோவை,சேலம்,கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 800 - கிலோ வாட் உயர் மின் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிமைக்காக போராடிய விவசாயிகளை குண்டுக்கட்டாக கைதுசெய்த காவலர்கள் - erode
ஈரோடு: உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 விவசாயிகளை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதனிடையே புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் செல்வராஜின் விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலத்தினை அளவிடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட வந்தனர். அப்போது அலுவலர்கள் உள்ளே வராத வகையில் செல்வராஜ் தனது தோட்டத்தை பூட்டி வைத்தார்.இதனையடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கபட்டு விவசாயி செல்வராஜ் உடன் பேச்சு வார்தையில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினரும் இழப்பீடு தொகைக்கான காசோலையுடன் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். காசோலையை வாங்க மறுத்தத்துடன் அலுவலர்களையும் விவசாயி செல்வராஜ் தனது தோட்டத்தில் அனுமதிக்கவில்லை.பின்னர் காவல்துறையினர் செல்வராஜ் தோட்டத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதுடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக ஜேசிபி இயந்திரங்களுடன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களையும் வெட்டினர்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கிசென்று காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.