ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைக்கு உட்பட்ட அம்மாபேட்டையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டதமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் 900 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறைகள் திறந்திருந்த போதும் சரி, தற்போது 60 நாட்களாக சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ள போதும் சரி கால்வாய்களில் சாயக்கழிவு நீர் கலப்பதாக தவறான தகவல்கள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. கால்வாய்களில் சாயக்கழிவு கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.