ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளைஞர் ஒருவர் கடந்த சில தினகங்களுக்கு முன்பு மாயமானதை தொடர்ந்து தொழிலாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தனியார் நூற்பாலையில் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி கசரப், என்பவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து நூற்பாலை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி 100 க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கோபி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
தமிழர்களை வேலைக்கு அமர்த்தியதாக பீகார் தொழிலாளர்கள் மீதான குற்றசாட்டுக்கு போலீஸ் மறுப்பு! இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப் என்பவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வட மாநில தொழிலாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், அதை கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் தொழிற்சாலையில் பணியாற்றி ஒடிசா தொழிலாளியை கண்டுபிடிக்கக்கோரி பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ”ஆனால் தமிழ்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை கண்டித்து பீகார் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது தவறு” என கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளத்தால் 31.54 லட்சம் மக்கள் பாதிப்பு!