சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி, பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் தண்ணீருக்காக அணைக்கு வருவது வழக்கம். நேற்று (நவ.15) மாலை வனப்பகுதியைவிட்டு வெளியேறிய இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் தண்ணீரைத் தேடி பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதிக்கு வந்தன.
அணையில் தேங்கியுள்ள நீரில் காட்டு யானைகள் நீரை உறிஞ்சி குடித்ததோடு தண்ணீருக்குள் இறங்கி சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தன. இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் விளையாடிய காட்டு யானைகள் பின்னர் மீண்டும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலையை கடந்து காராச்சிக்கொரை வனப்பகுதிக்குள் சென்றன.