தமிழ்நாடு

tamil nadu

சத்தியமங்கலம் அருகே வாழைகளை சேதப்படுத்திய யானைகள்

By

Published : Jul 15, 2020, 6:06 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய யானைகளை கட்டுப்படுத்தமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Elephants damage bananas
Elephants damage bananas

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த விளாமுண்டி பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் விளைநிலங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் விளாமுண்டி வனத்தில் இருந்த வந்த யானைகள் மின்வேலிகளை சேதப்படுத்திவிட்டு அம்மாபாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.

அங்கு வந்து சுரேஷ் என்பவரின் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து சாகுபடி செய்த நேந்திரன் வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனால் சுமார் 500 வாழை மரங்கள் சேதமைடந்தன.

அதைத் தொடர்ந்து காட்டுயானைகள் பக்கத்துக்குத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை முறித்து தின்றது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்த்து பட்டாசு வெடித்து யானைகளை துரத்தினர் ஆனால் யானைகள் அதே இடத்தில் முகாமிட்டது.

பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தப்பட்டை அடித்தும் மூன்று மணி நேரத்துக்குப் பின் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். யானைகள் வனத்தில் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details