தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறட்சி: கூட்டம் கூட்டமாக வலசை செல்லும் யானைகள் - Elephants migrating in search of fodder in talawade

தாளவாடி வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக யானைகள் கூட்டம் கூட்டமாக தீவனம் தேடி இடம்பெயர்கின்றன.

தாளவாடியில் சாலையை கடந்து செல்லும் யானைகள்
தாளவாடியில் சாலையை கடந்து செல்லும் யானைகள்

By

Published : Apr 12, 2021, 1:46 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்கள் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, புலி என பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. அண்மைக் காலமாகவே இப்பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் உணவு, நீர் இன்றி சாலைப் பகுதிகளில் நடமாடிவருகின்றன.

தாளவாடியில் சாலையை கடந்து செல்லும் யானைகள்

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சிக்கள்ளி வழியாக தலமலைக்கு செல்லும் வழியில் யானைகள் கூட்டம் கூட்டமாக தீவனம் தேடி சாலையை கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை யானைகள் துரத்தியதால் அவர்கள் தலைத்தெறிக்க ஓடினர். இதனால் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details