ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம். அதே போல், இன்று அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முகாமிட்டன.
இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், சுமார் அரை மணி நேரம் யானைகள் சாலையின் குறுக்கே முகாமிட்டு நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.